தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.


Join the forum, it's quick and easy

தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.
தமிழ் இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் 09/11/17, 07:58 pm

» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm

» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm

» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am

» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm

» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am

» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm

» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm

» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm

» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am

» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm

» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm

» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am

» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am

» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm

» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm

» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm

» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm

» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm

» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm

» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm

» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm

» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am

» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am

» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am

» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am

» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am

» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am

» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am

» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am


சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)

2 posters

Go down

சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) Empty சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)

Post by Admin 29/08/14, 12:02 pm

செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) சாத்திரங்கள் பதினான்கு. அவையாவன.
1) திருவுந்தியார் 2) திருக்களிற்றுப்படியார் 3) சிவஞான போதம் 4)சிவஞான சித்தியார்
5) இருபா இருபஃது 6)உண்மை விளக்கம் 7) சிவப்பிரகாசம் Cool திருவருட்பயன்
9) வினா வெண்பா 10) போற்றிப் பஃறொடை வெண்பா 11) கொடிக்கவி
12) நெஞ்சு விடு தூது 13) உண்மை நெறி விளக்கம் 14) சங்கற்ப நிவாரணம்.

இவற்றை
உந்திக் களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் – வந்த அருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று
என்ற பழைய வெண்பா ஒன்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

இவற்றுள் சிவஞான போதம் என்னும் நூல் செம்பொருள் துணிவின் (சைவசித்தாந்தத்தின்) தலைமணி நூல். பன்னிரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்நூல்களின் கருத்துகளையும் அடக்கி, அளவை நெறி கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத்திட்பமும் நுட்பமும் அமையச் சித்தாந்த கருத்துகளை முழுமையாக விளக்கும் முதல்நூல் இது.

திருக்குறளை விட சிவஞான போதம் மிகவும் சுருங்கியது.
அதன் சுருக்கம் வருமாறு:
சூத்திரம்(நூற்பா): 12
வரிகள்: 40
சொற்கள்: 216
எழுத்துக்கள்: 624

624 எழுத்துக்களிலேயே எல்லாக்கருத்துக்களையும் செறிவாகக் கூறிய ஒரு நூல் உலகிலேயே இது ஒன்றுதான் என்று கூறலாம்.

இத்தகைய ஒப்புயர்வற்ற முழுமுதல்நூலைச் செய்தருளியவர் மெய்கண்டார்; இந்நூலாலும் பிறவாற்றாலும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் செம்பொருள் துணிவினை (சித்தாந்தத்தினை) தெளிய உணர்த்தியருளினார். இந்த மாணாக்கர்களும் தங்கள் நூல்களாலும் உபதேசங்களாலும் எங்கும் செம்பொருள் துணிவினை (சித்தாந்தத்தினை) விளங்கச் செய்தனர்.

இதன் பெருமையைத் “திருக்குறள் ஆகிய தமிழ் வேதம் பசு; திருமூலர் திருமந்திரம் ஆகிய தமிழ் ஆகமம் அந்தப் பசுவின் பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திருமுறைகள் அப்பாலின் நறுநெய்; மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய சுவையாகும்” என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர்.


கடவுள் வணக்கம்
கல்லால் நிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.

பொழிப்புரை :
மலைவு: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால் வேதங்களிலே உள்ள உயர்ந்த கருத்துக்கள் பற்றி ஐயப்பாடு உள்ளவர்களுக்கு, எந்தவித ஐயப்பாடும் திரிபும் இல்லாத, அந்த வேதங்களைத் தோற்றுவித்தவனாகிய ஈசன்,
மலைவு இல்லார் கல்லால் நீழல்: அருள் வீழ்ச்சியின் வடிவாகிய ஆலமரத்தின் நிழலிலே தென்முக கடவுளாக அமர்ந்திருந்து,
அருளிய: அந்த ஐயப்பாடுகளை நீக்கும் வண்ணம் விளக்கமாக அருளிச் செய்தவற்றை இங்கு நான் எடுத்துரைக்க,
நல்லார்: நல்லோர் ஆகிய சான்றோர்கள் தாம் நூல் செய்யும் முன்,
பொல்லார்: செதுக்கும் உளியால் பொல்லப்படாத, வடிவமைக்கப்படாத இயற்கை வடிவனனாகிய பிள்ளையார் பெருமானின்,
இணைமலர்: அறிவுச்சத்தி ஆக்கசத்தியென்னும் இரண்டு திருவடித்தாமரைகளை,
புனைவரே: வணங்குவார்களே,

அதைப்போல நானும் பணிந்து இந்த ‘சிவஞானபோதம்’ என்னும் நூலைத் துவங்குகிறேன்.
(தொடரும்)
Admin
Admin
நிர்வாகி
நிர்வாகி

Posts : 46
Join date : 20/08/2014

https://tamilhindu.catsboard.com

Back to top Go down

சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) Empty Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)

Post by கே இனியவன் 14/12/16, 02:33 pm

நல்வாழ்த்துகள்
கே இனியவன்
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum